1000 கோடி வசூல் செய்து சாதனை செய்ய கமல் திட்டம்!!
கமல் தற்போது ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் பிசியாக இருக்கிறார். முதல் பாகத்தை வெளியிடுவதில் பெரும் சர்ச்சைகளை சந்தித்து அப்படத்தை வெளியிடுவதற்குள் படாதாபாடு பட்டுவிட்டார். இறுதியில் அப்படம் வெளியாகி அவருக்கு சுமார் ரூ.200 கோடி வரை வசூலை வாரித் தந்தது.
இதேபோல் ‘விஸ்வரூபம்-2’ பாகத்திலும் வசூலை வாரிக்குவித்துவிட வேண்டும் என்று முனைப்பில் உள்ளார். நல்ல படங்களை கொடுத்தால் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்க முடியும் என்கிறார் கமல்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ரூ.200 கோடியெல்லாம் பெரிய வசூல் கிடையாது. அதிகபட்சமாக ஆயிரம் கோடி ரூபாய் வரை நம்மால் வசூலிக்க முடியும். காரணம், 100 கோடி ரசிகர்களை நாம் வைத்திருக்கிறோம். அதனால், அவர்கள் விரும்பும் வகையில் படங்கள் கொடுத்தால் கண்டிப்பாக ரூ.1000 கோடி வரை வசூல் செய்துவிடலாம். வருங்காலத்தில் இதை செய்து காட்டவேண்டும் என்ற ஆர்வம் என்னுள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- See more at: http://www.tamilspace.com/2013/11/kamal-plan-1000-crore-sales.html#sthash.HE1XusmJ.dpuf