Pages

Showing posts with label NewsInTamil. Show all posts
Showing posts with label NewsInTamil. Show all posts

ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகும் ஆர்யா :

ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகும் ஆர்யா :
சமீபகாலமாக ஹாட்ரிக் வெற்றிகளை நோக்கி பாய்கிறார் ஆர்யா.
ஆர்யா நடித்த ராஜா ராணி, ஆரம்பம் என இரண்டு படங்களும் நிற்காத ரேஸ் குதிரைகளாக ஓடிக்கொண்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் மூன்றாவது குதிரையாக இரண்டாம் உலகம் படமும் வரும் 22ம் தேதி ரேஸில் குதிக்கிறது.
நிச்சயம் இந்தப்படத்தின் மூலம் ஆர்யா ஹாட்ரிக் வெற்றியை ருசிப்பது உறுதி என்கிறது பட யூனிட். காரணம் இப்படத்தில் ஆர்யாவின் இரண்டுவிதமான தோற்றங்கள், அதற்காக அவர் கொடுத்திருக்கும் கடின உழைப்பு எல்லாம் பிரமிக்கத்தக்கவை.
பி.வி.பி. சினிமா கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் செலவில் செல்வராகவன் இயக்கத்தில் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.
ஆர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ள இப்படம் தெலுங்கிலும் ‘வர்ணா’ என்ற பெயரில் வெளியாகிறது.
தனது கனவுப்படம் என்று சொல்லும் செல்வராகவன் இந்தப்படத்தை ப்ரேம் பை ப்ரேமாக செதுக்கியிருக்கிறார்.
ஆர்யா, அனுஷ்கா இருவருமே தங்களது திரையுலக வாழ்க்கையில் இரண்டாம் உலகம் படம் ஒரு மறக்கமுடியாத அனுபவம் என குறிப்பிட்டுள்ளனர்.

கோடம்பாக்கம் அதிரும் ஒரு சூடான செய்தி :

கோடம்பாக்கம் அதிரும் ஒரு சூடான செய்தி :
சிம்பு, நயன்தாரா மீண்டும் ஜோடி சேரவுள்ளதால் கோலிவுட் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
நீண்ட நாட்களாக நடிப்பிற்கு முழுக்கு போட்ட நயன்தாரா, தற்போது மீண்டும் ராஜா ராணி, ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை நிலைநிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஏற்கெனவே பிரிந்த காதல் ஜோடியான சிம்பு, நயன்தாரா இருவரும் பாண்டிராஜ் படத்தில் ஜோடி சேரவுள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டு வந்தது.
ஏனெனில், சிம்பு - பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகிவரும் படத்திற்கு ஒரு ஏஞ்சல் போல் தோற்றமளிக்கும் ஹீரோயினை வலைவீசி தேடி வந்துள்ளனர்.
இதற்கிடையில் நேற்று 29வது பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாராவுக்கு, இயக்குனர் பாண்டிராஜ் 'ஹேப்பி பர்த்டே டு ஏஞ்சல் நயன்தாரா' என்று தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பாண்டிராஜ் தனது படத்தின் ஹீரோயின் மயிலா கதாபாத்திரத்துக்கும்  நயன்தாராவை நாடியுள்ளார். கதை மிகவும் பிடித்துப்போக, நயனும் ஓகே சொல்லிவிட்டாராம். 
இதனை உறுதி செய்யும் வகையில் பாண்டிராஜ் தனது சமூக வலைதளத்தில், "we have searched heroine from long time for our  mylaa  character now finally we have fixed the heroine that  none otherthan nayanthara :-)" என ட்விட்டிருந்தார்.
இந்த ஜோடி ஏற்கெனவே, சிம்பு இயக்கி நடித்த வல்லவன் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் இந்த காதல் ஜோடியைக் கண்டு கோடம்பாக்கமே திக்குமுக்காடியுள்ளது.

பொங்கலுக்கு வெளியாகிறது ஒரு பிரம்மாண்டம்

பொங்கலுக்கு வெளியாகிறது ஒரு  பிரம்மாண்டம் :

பொங்கலுக்கு வெளியாகிறது கொச்சடையான் எது அதிகாரபூர்வமான அறிவிப்பு.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ரஜினியின் பல கோடி ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சி தரும் செய்தியாக இது அமைந்துள்ளது.
முதல் படம் கோச்சடையான் படத்துக்கு பல சிறப்புகள் உண்டு. இந்தப் படம்தான் இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் 3டி படம். ரூ 100 கோடியில் பல நாட்டு தொழில்நுட்ப நிபுணர்களின் உழைப்பில் உருவாகியுள்ளது.
கோச்சடையான் – ராணா இந்தப் படத்தில் மதுரையை தலைநகராகக் கொண்டு தர்ம ஆட்சி செலுத்திய மன்னன் கோச்சடையான் மற்றும் அவர் மகன் இளவரசன் ராணா ஆகிய இரு வேடங்களில் வருகிறார் ரஜினி.
தீபிகா படுகோன் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஷோபனா, ருக்மணி, நாசர், ஜாக்கி ஷெராப் என பெரும் நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.
கேஎஸ் ரவிக்குமார் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்க மேற்பார்வை பொறுப்பை கேஎஸ் ரவிக்குமார் lankaspy.com கவனித்தார். ரஜினி, தீபிகா நடித்த நிஜ காட்சிகள் அனைத்தையும் இவர் மேற்பார்வையிலேயே இயக்குநர் சௌந்தர்யா படமாக்கினார்.
3 ஆண்டுகள்… சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று ரஜினி திரும்பிய பிறகு சில மாதங்கள் கழித்து இந்தப் படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. லண்டனில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பின்னர் கேரளாவிலும் சென்னை ஸ்டுடியோக்களிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தமிழ், இந்திப் பதிப்புகளுக்கு ரஜினியே சொந்தக் குரலில் டப்பிங் பேசினார்.
ஜப்பான் மொழி ஜப்பான் மொழியில் வெளியாகும் கோச்சடையானுக்காக, ஜப்பானிய மொழி கற்று படத்தில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார் ரஜினி. ஏ ஆர் ரஹ்மான் இசையில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலையும் தமிழ், இந்தியில் ரஜினி பாடியுள்ளார்.
விக்ரம் சிம்மா தெலுங்கில் இந்தப் படத்துக்கு விக்ரம் சிம்ஹா என்று தலைப்பிட்டுள்ளனர். தெலுங்கில் மிகப் பெரிய அளவில் இந்தப் படம் வெளியாகிறது.lankaspy.com தெலுங்கானா பிரச்சினையில் தெலுங்கு நடிகர்களின் படங்கள் வெளியாகாமல் தவிப்பதால், எந்தப் பிரச்சினையும் இல்லாத கோச்சடையானை வெளியிடுவதில் ஆந்திர சினிமா விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.


எல்லா வேலைகளும் ஓவர்.. படத்தின் அனைத்து வேலைகளும் தற்போது முடிந்துவிட்டன. ஒரு டீசர் மற்றும் ஒரே ஒரு பாடலின் ஒலி டீசர் மட்டுமே இப்போதைக்கு வெளியில் வந்துள்ளது. இதில் பாடல் டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
டிசம்பரில் ஆடியோ இந்தப் படத்தின் முழுமையான இசையை கடந்த அக்டோபரில் வெளியிடுவதாகக் கூறியிருந்தார்கள். இப்போது டிசம்பர் மாதம் ஆடியோ ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
இணை தயாரிப்பாளர் படத்தின் இணை தயாரிப்பாளரும் மீடியா ஒன் அதிபருமான டாக்டர் முரளி மனோகர் இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில், “அனைத்துப் பணிகளும் முடிந்து, இப்போது பின்னணி இசை சேர்ப்பு நடக்கிறது.lankaspy.com டிசம்பரில் ஆடியோ வெளியிடப்படும்.
பொங்கலுக்கு… வரும் பொங்கல் பண்டிகையையொட்டி, ஜனவரி 10-ம் தேதியே கோச்சடையானை வெளியிட திட்டமிட்டுள்ளோம். விளம்பர வேலைகள் டிசம்பரில் தொடங்கும்,’ என்று அறிவித்துள்ளார்.

தம்மன்னா-ன் பெயரை கேட்டாலே அதிர்ந்து போகும் நடிகர்கள் :

தம்மன்னா-ன் பெயரை கேட்டாலே அதிர்ந்து போகும் நடிகர்கள் :

'கல்லூரி' படத்தில், ஒன்றும் தெரியாத பெண்ணாக தமிழுக்கு வந்தார், தமன்னா. அதற்கு பின், அடுத்தடுத்து ஹிட் கொடுத்து, ரசிகர்களின் மனதில், இடம் பிடித்தார். பின், பாலிவுட்டுக்கு சென்று விட்டு, மீண்டும், தமிழ், தெலுங்கில், இரண்டாவது இன்னிங்சை துவக்கியுள்ளார். சமீபகாலமாக, அவர் நடிக்கும் படங்களில், நடன காட்சிகளில், அவர் ஆடுவதை பார்த்து, மிரண்டு போயிருக்கிறது, திரையுலகம். அதிலும், தெலுங்கு படங்களில், அவரின் நடன வேகத்தை கண்டு, அரண்டு போயிருக்கின்றனர், ஆந்திர ஹீரோக்கள். அவரின் வேகத்துக்கு, ஜோடி போட்டு ஆட முடியாமல், 'டூயட் பாடலாக இருந்தாலும், தமன்னாவின் நடன காட்சிகளை தனியாக படம்பிடித்து விடுங்கள். அவர் வேகத்துக்கு, நம்மால் ஈடு கொடுக்க முடியாது' என, ஜகா வாங்கத் துவங்கியிருக்கின்றனர், தெலுங்கு ஹீரோக்கள். மற்றும் சிலரோ, 'தமன்னாவா, அய்யய்யோ, அந்த பொண்ணு, பிசாசு வேகத்தில் ஆடுமே. அந்த பெண்ணுடன் சேர்ந்து ஆடினால், நமக்கு பெண்டு கழன்று விடுமே' என, பின் வாங்குகின்றனராம்.

லக்ஷ்மி ராய்-க்கு கை கொடுத்த kollywood

லக்ஷ்மி ராய்-க்கு கை கொடுத்த kollywood:

ன்பதுல குரு' படத்தில், ஹீரோயினாக நடித்ததை அடுத்து தமிழில், தன் மார்க்கெட் எகிறும் என, கணக்கு போட்டிருந்தார், லட்சுமி ராய். ஆனால், அந்த படம் சறுக்கி விடவே, வெறுத்துப் போன அவர், தெலுங்கு, கன்னடம் என்று படையெடுத்தார். ஆனபோதும், மீண்டும் அவரை அரவணைத்தது என்னவோ தமிழ் சினிமா தான். புதிதாக தயாராகும், 'அரண்மனை' படத்தில், அம்மணி தான், ஹீரோயின். இதே படத்தில், ஹன்சிகா, ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகைகளும் இருப்பதால், வழக்கம் போல், தனக்கு, ஏதாவது கேரக்டர் தான் தருவார்கள் என்று தான், கதை கேட்கத் துவங்கினாராம். ஆனால், எடுத்த எடுப்பிலேயே, 'படத்தில், எனக்கு நீங்கள் தான் ஜோடி' என்று, இயக்குனரும், ஹீரோவுமான, சுந்தர்.சி கூறியதும், செம குஷியாகி விட்டாராம் லட்சுமி ராய். இதனால், இந்தாண்டு தீபாவளியை, பட்டாசு வெடித்து, அமர்க்களமாக கொண்டாடிஇருக்கிறாராம் , அவர்.

விக்ராந்த்-ன் நல்ல நண்பன் :

விக்ராந்த்-ன் நல்ல நண்பன் :

டிகர் விக்ராந்த் ஆர்.வி.உதயகுமாரின் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ரஜினி காந்த் தோற்றத்தில் விஜயகாந்த் அறிமுகமானதைப்போல, கமல் தோற்றத்தில் மோகன் அறிமுகமானதைப்போல, விஜய் தோற்றத்தில் அறிமுகமானர் விக்ராந்த் அறிமுகமானார். விஜய்யின் சித்தி மகன்தான் விக்ராந்த். விஜய் இடத்தை பிடிக்காவிட்டாலும், விஜய் கால்ஷீட் கிடைக்காத இயக்குனர்களுக்கு, தயாரிப்பாளர்களுக்கு அவர் ஒரு வரப்பிரசாதமாக இருப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது. அப்படி எந்த மாற்றமும் நடக்கவில்லை.
சில சிறிய படங்களில் ஹீரோவாக நடித்தார். சில படங்களில் நான்கைந்து ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். அதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. விக்ராந்திற்கு விஷால் நண்பன். செலிபிரிட்டி கிரிக்கெட்டின் போது விஷால் கேப்டனாக இருந்த அணியில் சிறப்பாக விளையாடி அவருக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். இதனால் அவர்கள் நட்பு ஆழமானது. 
விக்ராந்திற்கு ஒரு திருப்பம் தரவேண்டும் என்று நினைத்த விஷால் தான் சொந்த கம்பெனி தொடங்கி தயாரித்த முதல் படமான பாண்டியநாட்டில் முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்தார். இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் விஷாலுக்கு வெளிச்சம் கிடைத்திருக்கிறது. இப்போது பல வாய்ப்புகள் அவரைத் தேடி வருகின்றன. விஷாலும் விக்ராந்தை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இளைய தளபதி உங்கள் அண்ணனாக இருந்து செய்யாததை புரட்சித் தளபதி விஷால் உங்களுக்கு செய்த உதவி பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது "விஷால் எனக்கு 15 ஆண்டுகால நண்பன். அவன் எனக்கு செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள். இளைய தளபதி பற்றியெல்லாம எனக்குத் தெரியாது" என்று விக்ராந்த் பதில் சொன்னபோது கண்களில் கண்ணீர்.

பின்னணி இசை-ல் காணப்படும் சிக்கல்கள்

பின்னணி இசை-ல் காணப்படும் சிக்கல்கள்
 
ஒரு இசையமைப்பாளர் இசையமைக்கும் படத்திற்கு மற்றொரு இசையமைப்பாளர் பின்னணி இசை சேர்த்துக் கொடுப்பது இப்போது எல்லா படங்களுக்கும் ஒரு ஸ்டைலாகவே அமைந்துவிட்டது. இப்படி ஏன் நடக்கிறது? இதன் பின்னணியில் பல விஷயங்கள் இருக்கிறது. சிலர் பாடலுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை பின்னணி இசைக்கு கொடுப்பதில்லை. அதன் காரணமாகவும் டைரக்டர்கள் நன்றாக பின்னணி இசையமைக்கும் மியூசிக் டைரக்டர்களை நாடுகிறார்கள்.ஆனால் இரண்டாம் உலகம் படத்திற்கு இசையமைத்த ஹாரிஸ், தனது பின்னணி இசை பொறுப்பை தொடர முடியாத நிலைமை. இவருக்கு பதிலாக அனிருத் இசையமைக்கிறார். அதே போல ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கும் மதயானை கூட்டம் படத்திற்கு ரஹ்நந்தன்தான் இசையமைப்பாளர். ஆனால் பின்னணி இசையை ஜி.வி.பிரகாஷே செய்கிறாராம். கோடம்பாக்கத்தில் ஒரு முழு படத்திற்கு இசையமைத்ததை விட, அதிக படங்களுக்கு பின்னணி இசையை மட்டும் வழங்கியிருக்கிறார்கள் சபேஷ் முரளி சகோதரர்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு 'பின்னணி' இருப்பதுதான் விசேஷம்.

சூரி-க்கு விஜய் சிபாரிசு

சூரி-க்கு விஜய் சிபாரிசு:

வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம் பிரபலமானவர் சூரி. அதையடுத்து, களவாணி, வேலாயுதம், சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், நய்யாண்டி உள்பட பல படங்களில் சிறப்பாக காமெடி செய்திருந்தார். இதனால் சந்தானத்தின் கால்சீட் கிடைக்காத கம்பெனிகளெல்லாம் சூரியை நோக்கி படையெடுக்கத் தொடங்கின.

அதனால் தற்போது கைநிறைய படங்கள் வைத்திருக்கும் காமெடியனாகி விட்டார் சூரி. அதிலும் வேலாயுதம் படத்தை அடுத்து மீண்டும் விஜய் நடித்து வரும் ஜில்லா படத்திலும் முக்கிய காமெடியனாகியிருக்கிறார்.

வேலாயுதம் படத்தில், முதல் நாள் சூரியுடன் நடித்தபோது அவரது நடிப்பைப்பார்த்து வியந்த விஜய், யார் அந்த புதுக்காமெடியன்? என்று அவரைப்பற்றி விசாரித்தாராம்.

அதுவரை விஜய்யை விட்டு விலகியே நின்ற சூரி, அதன்பிறகு விஜய்யிடம் தன்னைப்பற்றி சொன்னதோடு, நெருக்கமாகி விட்டாராம். அதையடுத்து தன்னுடன் வருவது போன்று சூரிக்கு அதிக காட்சிகள் வைக்குமாறு சொன்ன விஜய், இப்போது ஜில்லா படத்திலும் சூரிக்கு அதிகப்படியான காட்சிகள் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம்.

இதனால் இந்த படத்திற்கு பிறகு சூரியும் சந்தானத்துக்கு இணையான இன்னொரு காமெடியனாகி விடுவார் என்கிறார்கள்.

இப்படி விஜய்யே தனக்கு நேரடியாக சிபாரிசு செய்வதால், ஜில்லாவில் மிகுந்த உற்சாகத்துடன் நடித்துக்கொண்டிருக்கிறாராம் சூரி. - See more at: http://www.tamilspace.com/2013/11/Vijay-parotta-Suri-recommended.html#sthash.J2KS6yhB.dpuf

உயிரின் ஓசை-ஒரு சிறப்பு பார்வை


உயிரின் ஓசை-ஒரு சிறப்பு  பார்வை:

மௌனம்ரவி ஸ்வேதா மேனனின் பிரசவ காட்சியை நேரிடையாக  படம் பிடித்த “உயிரின் ஓசை” மலையாளம்,தமிழ் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் பிரதாப் சந்திரன்.அவரது மகன் அனூப் பிரசாத் தனது தந்தையை கௌரவிக்கும் பொருட்டு பிரதாப் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கி “உயிரின் ஓசை” என்ற படத்தை தயாரிக்கிறார்.
மலையாளத்தில் “களிமண்” என்ற பெயரில் தயாரான படமே “உயிரின் ஓசை” என்ற பெயரில் உருவாகிறது.
ஸ்வேதா மேனன், பிஜூமேனன், சுஹாசினி, லஷ்மி ராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் பிரியதர்சன் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார். சுனில்ரெட்டி, அனுபம்கேர் ஆகியோரும் நடிதிருக்கிறார்கள்.
ஒரு பாடலுக்கு ஆடும் நடிகையாக இருக்கும் ஸ்வேதா மேனன் பல போராட்டத்திற்கு பிறகு ஒரு படத்தில் கதாநாயகி ஆகிறார்.அந்த படத்தின் சிறப்பு காட்சியை காண வரும் அவரது கணவர் விபத்தில் சிக்கி மூளைச் சாவு நிலமைக்கு ஆளாகிறார்…இனி பிஜூமேனன் உயிர் பிழைக்க முடியாது என்கிற நிலமையில் உடல் உறுப்புகளை தானமாக கொடு என்று நடபு வட்டாரங்கள் கேட்கிறார்கள்.
எனக்குன்னு ஒரு வாரிசு கூட இல்லையே என்று அவர் கலங்குவதை கண்டு பிஜூமேனனின் உடலிலிருந்து உயிரணுவை எடுத்து ஸ்வேதாமேனனின் கருவறைக்குள் வைத்து அவளைத் தாயாக்குகிறார்கள்.அந்த பிரசவத்தை முழுவதுமாக படமாக்கி மக்களுக்கு காட்டுங்கள் என்கிறார்.
ஸ்வேதாமேனனின் நிஜ பிரசவத்தை இதற்காக படமாக்கினார்கள். அதற்காக பலத்த எதிர்ப்பும் கிளம்பியது. ஒரு பெண் தாயாவது எவ்வளவு வேதனையானது என்பதும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் காம கொடூரன்கள் இதை பார்த்தாவது திருந்த வேண்டும் என்று கூறி ஸ்வேதாமேனன் அந்த எதிர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
வசனம் – சபரிநாதன்
இசை – எம் .ஜெயச்சதிரன்
எடிட்டிங் – மணி.சி
இயக்கம் – பிளஸ்ஸி இவர் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் போன்ற பிரபல நடிகர்களை வைத்து படங்களை இயக்கியவர். பல தேசிய விருதுகளை பெற்றவர்.
நிர்வாக தயாரிப்பு – சி.மோகன்
தயாரிப்பு – அனூப் பிரதாப்.

சூர்யா-ன் அடுத்த அவதாரம்


சூர்யா-ன் அடுத்த அவதாரம்:


சூர்யா தற்பொழுது லிங்குசாமி – சந்தோஸ் சிவன் கூட்டணியில் பெயர் இடப்படாத படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் .இந்த படம் திரையுலகின் முக்கிய நடிகர்களையும் ,புதிய தொழில் நுட்பத்தையும் கொண்டு மிக பிரமாண்டமாக உருவகிக்கொண்டிருகிறது ,இந்த படம் தமிழ் திரை உலகில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது .இந்த படத்தின் ஹீரோயின் சமந்தா என கூறபடுகிறது ,வில்லனாக ஹிந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாயை லிங்குசாமி தேர்ந்தெடுத்திருக்கிறார் ,இந்த படத்தில் விஜய் அஜித்துக்கு வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வா தற்பொழுது சூர்யாவுடன் ஜோடி சேருகிறார் .இந்த படம் மிக பிரமாண்டமாகவும் மிகுந்த ஆக்‌ஷன் படமாகவும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என கூறுகிறார்கள் திரையுலகினர்

1000 கோடி வசூல் செய்து சாதனை செய்ய கமல் திட்டம்!!


1000 கோடி வசூல் செய்து சாதனை செய்ய கமல் திட்டம்!!

கமல் தற்போது ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் பிசியாக இருக்கிறார். முதல் பாகத்தை வெளியிடுவதில் பெரும் சர்ச்சைகளை சந்தித்து அப்படத்தை வெளியிடுவதற்குள் படாதாபாடு பட்டுவிட்டார். இறுதியில் அப்படம் வெளியாகி அவருக்கு சுமார் ரூ.200 கோடி வரை வசூலை வாரித் தந்தது.

இதேபோல் ‘விஸ்வரூபம்-2’ பாகத்திலும் வசூலை வாரிக்குவித்துவிட வேண்டும் என்று முனைப்பில் உள்ளார். நல்ல படங்களை கொடுத்தால் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்க முடியும் என்கிறார் கமல்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ரூ.200 கோடியெல்லாம் பெரிய வசூல் கிடையாது. அதிகபட்சமாக ஆயிரம் கோடி ரூபாய் வரை நம்மால் வசூலிக்க முடியும். காரணம், 100 கோடி ரசிகர்களை நாம் வைத்திருக்கிறோம். அதனால், அவர்கள் விரும்பும் வகையில் படங்கள் கொடுத்தால் கண்டிப்பாக ரூ.1000 கோடி வரை வசூல் செய்துவிடலாம். வருங்காலத்தில் இதை செய்து காட்டவேண்டும் என்ற ஆர்வம் என்னுள் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
- See more at: http://www.tamilspace.com/2013/11/kamal-plan-1000-crore-sales.html#sthash.HE1XusmJ.dpuf

நடிகர் தனுசிடம் தமிழ் கற்கிறேன்: அம்ரியா


கே.வி. ஆனந்த் இயக்கும் அனேகன் படத்தில் தனுஷ் ஜோடியாகியுள்ளார் இந்தி நடிகை அம்ரியா. தமிழ் தெரியாததால் படப்பிடிப்பில் சிரமப்படுகிறார். தனுஷ் தமிழ் கற்றுக் கொடுக்கிறார். இது குறித்து அம்ரியா கூறியதாவது:– 

எனக்கு தமிழ் தெரியாது. படப்படிப்பில் தினமும் வார்த்தைகள் கற்று வருகிறேன். சாப்பிட்டீங்களா எப்படி இருக்கீங்க போன்ற வார்த்தைகளை தெரிந்து வைத்துள்ளேன். தமிழில் நான் பேச வேண்டிய வசனங்களை மெதுவாக சொல்ல வைத்து பதிவு செய்து கொள்கிறேன். பிறகு அதை இந்தியில் எழுதி வைத்து படிக்கிறேன். 

தனுஷ் தமிழ் கற்று தருகிறார். தமிழ் வார்த்தைகளை எப்படி பேச வேண்டும் என்றும் சொல்லி தருகிறார். மொழி பிரச்சினையால் எனக்குள்ள சிரமங்கள் அவருக்கு புரிந்துள்ளது.

இவ்வாறு அம்ரியா கூறினார்.

எட்டு நாட்கள் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா - டிச 12-ம் தேதி தொடங்குகிறது!


சென்னை: சென்னையில் சர்வதேச திரைப்பட விழா 8 நாட்கள் நடக்கிறது. இதில், 25 தமிழ்ப் படங்கள் உள்பட 150 படங்கள் திரையிடப்படுகின்றன.
தமிழ் சினிமாவில் உள்ள பிரபல இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை உறுப்பினர்களாகக்கொண்ட ‘இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேசன்' அமைப்பு கடந்த 2003-ம் ஆண்டு முதல் சென்னையில் சர்வதேச பட விழாக்களை நடத்தி வருகிறது.


       ‘இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேசன்' நடத்தும் 11-வது சர்வதேச திரைப்படவிழா சென்னையில் அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.
விழாவில், சிறந்த தமிழ் படங்களுக்கான விருதுகளும், சிறப்பு நடுவர் விருதுகளும் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு நடைபெறும் சர்வதேச படவிழாவில் 55 நாடுகளைச் சேர்ந்த 150 படங்கள் திரையிடப்படுகின்றன. தமிழ் படங்களுக்கிடையே போட்டி நடத்தி, தரம் வாய்ந்த படங்களுக்கு விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
2012-ம் ஆண்டு அக்டோபர் 16-ந் தேதி தொடங்கி 2013-ம் ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி வரை தயாரிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்ட தமிழ் திரைப்படங்கள் இந்த போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷபனா ஆஸ்மி
இந்த சர்வதேச படவிழாவின் நிறைவு விழா டிசம்பர் 19-ந் தேதி நடைபெற இருக்கிறது. அதில், பிரபல இந்தி நடிகை ஷபனா ஆஸ்மி கலந்துகொள்கிறார். தமிழக அரசு உதவியுடன் இந்த சர்வதேச படவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் கணிசமான தொகையை இதற்காக தமிழக அரசு வழங்கி வருகிறது.
- See more at: http://www.tamil.thecinemanews.com/2013/11/12.html#sthash.X66lfDDb.dpuf

‘கிரிஷ் 3′ ஏழு நாட்களில் 200 கோடியை தாண்டியது


பாலிவுட் ஹீரோ ஹிருத்திக் ரோஷன் நடித்த’ கிரிஷ் 3′ தீபாவளி அன்று உலகம் முழுவதும் சுமார் 4000 திரை அரங்குகளில் வெளியானது. ஏழு நாட்களில் 200 கோடியை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது இத்திரைப்படம். இதனை இயக்கி இருப்பவர் ஹிரோ ஹிருத்திக்கின் அப்பா ராகேஷ் ரோஷனும், இசையமைத்துளளவர் சித்தப்பா ராஜேஷ் ரோஷன். சூப்பர் ஷூரோ படமான ‘கிரிஷ் 3′ -யை குழந்தைகள மட்டுமல்ல பெரியவர்களும் கொண்டாடுகின்றனர். 300 கோடியையும் தாண்ட வாய்ப்புள்ளதாக தியேட்டர் ஓனர்கள் கூறுகிறார்கள்.

Ajith and Karthi party together


It is Venkat Prabhu’s birthday today and a grand surprise party was thrown by his close friends in the industry, last night, at a private place in ECR. Apart from his usual gang, consisting of Yuvan Shankar Raja, Premgi, Jai, Vaibhav, Vasuki Baskar and the rest, Ajith and actor Karthi joined the party and wished the director.

Studio Green’s Gnanavelraja, SR Prabhu and Escape Artiste’s Madan were also seen at the bash. A special cracker show and Karaoke night were arranged as part of the celebration, which apparently were the highlights of the night.  
 
This afternoon, the director met a bunch of children at the RKV Studios and treated them with sumptuous Biriyani. He was welcomed by the delighted kids with fresh roses and wide smiles. It was also the birthday of a kid from the group that had gathered. Venkat Prabhu invited the girl and they both cut the birthday cake together.

More news about ROWDY

READY FOR ROWDY:


The Surya-Lingusamy project which has already got the vibes going through their test shoot with red dragon camera has got even bigger. The Surya - Samantha -Yuvan combo has now got two heavy additions in Manoj Bajpai of Gangs of Wasseypur fame and Vidyut Jamwal who played the antagonist role in Thala's Billa 2 and Thalapathy's Thuppakki
Sources reveal that  "Manoj Bajpai will be playing the main villain in the film. He is a seasoned actor, and his character has been etched in such a way that it will bring out the best in him. And Vidyut, who has already worked with Ajith and Vijay in Kollywood, has been roped in to play an important role. His character will be the suspense element in the film."
Comedy actor Sathyan and Tollywood Comedy Superstar Brahmanandam are also part of the stellar cast which is expected to go on floors from November 20.Surya has a double role in this film.

ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் இருந்து 25 நிமிட கட்சி நீக்கப்பட்டது :

ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் இருந்து 25 நிமிட கட்சி நீக்கப்பட்டது :



கார்த்தி நடித்த அழகுராஜா படத்தில் சந்தானம் காமெடி நீக்கப்பட்ட பிறகு மேலும் ஒரு பாடல் உள்பட 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ள படம் அழகுராஜா. 
இதில் புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு செய்தி படத்தை கிண்டல் செய்யும் வகையில் சந்தானம் காமெடி காட்சியில் நடித்திருப்பதாக பிரச்னை எழுந்தது.  
இதையடுத்து அக்காட்சி நீக்கப்பட்டது. தீபாவளி தினத்தன்று படம் திரைக்கு வந்தது. தற்போது மேலும் 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி பட குழுவினர் கூறும்போதுஇ ரிலீஸுக்கு பிறகு படம் பார்த்த  ரசிகர்கள் படம் நீளமாக இருப்பதாக பரவலாக புகார் கூறினர். 
இதையடுத்து இயக்குனர்இ தயாரிப்பாளர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதில் 25 நிமிட நேரம் குறைத்து டிரிம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஒரு பாடல் உள்ளிட்ட சில காட்சிகள் குறைக்கப்பட்டது.  டிஜிட்டல் யுக்தியுடன் புதிய பதிப்பாக இப்படம் தற்போது திரையிடப்படுகிறது. சில தியேட்டர்களில் கூடுதலாக படம் திரையிடப்பட்டிருக்கிறது. 
முதலில் இப்படம் 2 மணி நேரம் 54 நிமிடத்துக்கு தயாராகி இருந்தது என்றனர். 

அஜித் ரசிகர்களுக்கு சரியான பதிலடி கொடுப்பேன்- வரலக்ஷ்மிசரத்குமார் ஆவேசம் :


அஜித் ரசிகர்களுக்கு சரியான பதிலடி கொடுப்பேன்- வரலக்ஷ்மிசரத்குமார் ஆவேசம் :


விஷாலின் ‘பாண்டிய நாடு’ படம் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விஷாலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். 
அதாவது, விஷால், அஜீத், கார்த்தி ஆகியோரின் மூன்று படங்களையும் போட்டு, ‘இந்த தீபாவளிக்கு வின்னர் விஷால்’ என்று கருத்து தெரிவித்திருந்தார். இதைப் பார்த்த அஜீத் ரசிகர்கள் கடுப்பாகி வரலட்சுமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவரை தாறுமாறாக திட்டி கருத்து வெளியிட்டிருந்தனர். இதை பார்த்து கடுப்பான வரலட்சுமி அஜீத் ரசிகர்களுக்கு சரியான நெத்தியடி கொடுத்துள்ளார்.  
அஜீத் ரசிகர்களிடம் தான் மன்னிப்பு கேட்டதாக சில இணையதளங்களில் செய்தி வந்துள்ளது. நான் ஏன் அஜீத் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்கு அவசியம் எதுவும் இல்லை. தீபாவளிக்கு வெளியான மூன்று படங்களில் எனக்கு பிடித்தது விஷாலின் பாண்டிய நாடு என்று கூற எனக்கு உரிமையில்லையா? நாம் எந்த மாதிரி நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? 
அஜீத் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எல்லைமீறி என்னைப்பற்றி விமர்சனம் செய்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் அதை உடனடியாக நிறுத்த வேண்டும். அஜீத் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. அதற்காக அவருடைய ரசிகர்களின் கீழ்த்தரமான விமர்சனங்களை கேட்டுக்கொண்டு சகித்துக்கொள்ள என்னால் முடியாது. 
இனியும் என்னைப்பற்றி அவதூறாக அஜீத் ரசிகர்கள் கருத்து கூறினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்க தயங்க மாட்டேன் என கோபத்தோடு கூறியுள்ளார். இதன் காரணமாக கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The characters of Vijay Sethupathi and Arya revealed

Director SP Jananathan generally etches out interesting characterizations for the actors he deals with. His previous three films had the lead actors playing characters far from the normal.
 
Iyarkai
 
The movie had Shaam in the lead. He played the character of an orphan who is a sailor and falls in love with a local vendor. 
 
E
 
The movie based on Bio war had Jiiva in the lead, who played the character of a local boy who grew up in the dirty slum.
 
Peranmai
 
Jayam Ravi plays the role of a tribal forest guard who goes on a mission with five college girls.
 
It is now being reported that Jananathan's latest movie titled Purampokku that has Vijay Sethupathi and Arya in the lead, also has unique characters for the two leads in the film.
 
Arya will handle the role of a social activist while Vijay Sethupathi will play the role of a local railway worker who does all the work for people in the railways department. 
 
The shoot will kick off from January, 2014 in Kulu Manali after which the team will head to Jaisalmer and Bikaner, Stay tuned for more updates

Veeram teaser on November 7!



The First Look teaser of Thala Ajith's upcoming movie Veeram, directed by Siruthai Siva. Also starring Tamannaah, Santhanam and Vidharth, Veeram is said to be a family entertainer. Devi Sri Prasad is composing the music and the movie is slated for release in January 2014. The makers - Vijaya Productions, are looking to release the teaser in over 200 screens.
Get set for Thala's next!