Pages

லக்ஷ்மி ராய்-க்கு கை கொடுத்த kollywood

லக்ஷ்மி ராய்-க்கு கை கொடுத்த kollywood:

ன்பதுல குரு' படத்தில், ஹீரோயினாக நடித்ததை அடுத்து தமிழில், தன் மார்க்கெட் எகிறும் என, கணக்கு போட்டிருந்தார், லட்சுமி ராய். ஆனால், அந்த படம் சறுக்கி விடவே, வெறுத்துப் போன அவர், தெலுங்கு, கன்னடம் என்று படையெடுத்தார். ஆனபோதும், மீண்டும் அவரை அரவணைத்தது என்னவோ தமிழ் சினிமா தான். புதிதாக தயாராகும், 'அரண்மனை' படத்தில், அம்மணி தான், ஹீரோயின். இதே படத்தில், ஹன்சிகா, ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகைகளும் இருப்பதால், வழக்கம் போல், தனக்கு, ஏதாவது கேரக்டர் தான் தருவார்கள் என்று தான், கதை கேட்கத் துவங்கினாராம். ஆனால், எடுத்த எடுப்பிலேயே, 'படத்தில், எனக்கு நீங்கள் தான் ஜோடி' என்று, இயக்குனரும், ஹீரோவுமான, சுந்தர்.சி கூறியதும், செம குஷியாகி விட்டாராம் லட்சுமி ராய். இதனால், இந்தாண்டு தீபாவளியை, பட்டாசு வெடித்து, அமர்க்களமாக கொண்டாடிஇருக்கிறாராம் , அவர்.