ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகும் ஆர்யா :
சமீபகாலமாக ஹாட்ரிக் வெற்றிகளை நோக்கி பாய்கிறார் ஆர்யா.
ஆர்யா நடித்த ராஜா ராணி, ஆரம்பம் என இரண்டு படங்களும் நிற்காத ரேஸ் குதிரைகளாக ஓடிக்கொண்டு இருக்கின்றன. இந்த நேரத்தில் மூன்றாவது குதிரையாக இரண்டாம் உலகம் படமும் வரும் 22ம் தேதி ரேஸில் குதிக்கிறது.
நிச்சயம் இந்தப்படத்தின் மூலம் ஆர்யா ஹாட்ரிக் வெற்றியை ருசிப்பது உறுதி என்கிறது பட யூனிட். காரணம் இப்படத்தில் ஆர்யாவின் இரண்டுவிதமான தோற்றங்கள், அதற்காக அவர் கொடுத்திருக்கும் கடின உழைப்பு எல்லாம் பிரமிக்கத்தக்கவை.
பி.வி.பி. சினிமா கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் செலவில் செல்வராகவன் இயக்கத்தில் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.
ஆர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ள இப்படம் தெலுங்கிலும் ‘வர்ணா’ என்ற பெயரில் வெளியாகிறது.
தனது கனவுப்படம் என்று சொல்லும் செல்வராகவன் இந்தப்படத்தை ப்ரேம் பை ப்ரேமாக செதுக்கியிருக்கிறார்.
ஆர்யா, அனுஷ்கா இருவருமே தங்களது திரையுலக வாழ்க்கையில் இரண்டாம் உலகம் படம் ஒரு மறக்கமுடியாத அனுபவம் என குறிப்பிட்டுள்ளனர்.