கோடம்பாக்கம் அதிரும் ஒரு சூடான செய்தி :
சிம்பு, நயன்தாரா மீண்டும் ஜோடி சேரவுள்ளதால் கோலிவுட் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
நீண்ட நாட்களாக நடிப்பிற்கு முழுக்கு போட்ட நயன்தாரா, தற்போது மீண்டும் ராஜா ராணி, ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை நிலைநிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஏற்கெனவே பிரிந்த காதல் ஜோடியான சிம்பு, நயன்தாரா இருவரும் பாண்டிராஜ் படத்தில் ஜோடி சேரவுள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டு வந்தது.
ஏனெனில், சிம்பு - பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகிவரும் படத்திற்கு ஒரு ஏஞ்சல் போல் தோற்றமளிக்கும் ஹீரோயினை வலைவீசி தேடி வந்துள்ளனர்.
இதற்கிடையில் நேற்று 29வது பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாராவுக்கு, இயக்குனர் பாண்டிராஜ் 'ஹேப்பி பர்த்டே டு ஏஞ்சல் நயன்தாரா' என்று தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பாண்டிராஜ் தனது படத்தின் ஹீரோயின் மயிலா கதாபாத்திரத்துக்கும் நயன்தாராவை நாடியுள்ளார். கதை மிகவும் பிடித்துப்போக, நயனும் ஓகே சொல்லிவிட்டாராம்.
இதனை உறுதி செய்யும் வகையில் பாண்டிராஜ் தனது சமூக வலைதளத்தில், "we have searched heroine from long time for our mylaa character now finally we have fixed the heroine that none otherthan nayanthara :-)" என ட்விட்டிருந்தார்.
இந்த ஜோடி ஏற்கெனவே, சிம்பு இயக்கி நடித்த வல்லவன் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் இந்த காதல் ஜோடியைக் கண்டு கோடம்பாக்கமே திக்குமுக்காடியுள்ளது.