அஜித் ரசிகர்களுக்கு சரியான பதிலடி கொடுப்பேன்- வரலக்ஷ்மிசரத்குமார் ஆவேசம் :
விஷாலின் ‘பாண்டிய நாடு’ படம் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விஷாலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.
அதாவது, விஷால், அஜீத், கார்த்தி ஆகியோரின் மூன்று படங்களையும் போட்டு, ‘இந்த தீபாவளிக்கு வின்னர் விஷால்’ என்று கருத்து தெரிவித்திருந்தார். இதைப் பார்த்த அஜீத் ரசிகர்கள் கடுப்பாகி வரலட்சுமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவரை தாறுமாறாக திட்டி கருத்து வெளியிட்டிருந்தனர். இதை பார்த்து கடுப்பான வரலட்சுமி அஜீத் ரசிகர்களுக்கு சரியான நெத்தியடி கொடுத்துள்ளார்.
அஜீத் ரசிகர்களிடம் தான் மன்னிப்பு கேட்டதாக சில இணையதளங்களில் செய்தி வந்துள்ளது. நான் ஏன் அஜீத் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்கு அவசியம் எதுவும் இல்லை. தீபாவளிக்கு வெளியான மூன்று படங்களில் எனக்கு பிடித்தது விஷாலின் பாண்டிய நாடு என்று கூற எனக்கு உரிமையில்லையா? நாம் எந்த மாதிரி நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?
அஜீத் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எல்லைமீறி என்னைப்பற்றி விமர்சனம் செய்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் அதை உடனடியாக நிறுத்த வேண்டும். அஜீத் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. அதற்காக அவருடைய ரசிகர்களின் கீழ்த்தரமான விமர்சனங்களை கேட்டுக்கொண்டு சகித்துக்கொள்ள என்னால் முடியாது.
இனியும் என்னைப்பற்றி அவதூறாக அஜீத் ரசிகர்கள் கருத்து கூறினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்க தயங்க மாட்டேன் என கோபத்தோடு கூறியுள்ளார். இதன் காரணமாக கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.