உயிரின் ஓசை-ஒரு சிறப்பு  பார்வை:
மௌனம்ரவி ஸ்வேதா மேனனின் பிரசவ காட்சியை நேரிடையாக  படம் பிடித்த “உயிரின் ஓசை” மலையாளம்,தமிழ் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் பிரதாப் சந்திரன்.அவரது மகன் அனூப் பிரசாத் தனது தந்தையை கௌரவிக்கும் பொருட்டு பிரதாப் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கி “உயிரின் ஓசை” என்ற படத்தை தயாரிக்கிறார்.
மலையாளத்தில் “களிமண்” என்ற பெயரில் தயாரான படமே “உயிரின் ஓசை” என்ற பெயரில் உருவாகிறது.
ஸ்வேதா மேனன், பிஜூமேனன், சுஹாசினி, லஷ்மி ராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் பிரியதர்சன் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார். சுனில்ரெட்டி, அனுபம்கேர் ஆகியோரும் நடிதிருக்கிறார்கள்.
ஒரு பாடலுக்கு ஆடும் நடிகையாக இருக்கும் ஸ்வேதா மேனன் பல போராட்டத்திற்கு பிறகு ஒரு படத்தில் கதாநாயகி ஆகிறார்.அந்த படத்தின் சிறப்பு காட்சியை காண வரும் அவரது கணவர் விபத்தில் சிக்கி மூளைச் சாவு நிலமைக்கு ஆளாகிறார்…இனி பிஜூமேனன் உயிர் பிழைக்க முடியாது என்கிற நிலமையில் உடல் உறுப்புகளை தானமாக கொடு என்று நடபு வட்டாரங்கள் கேட்கிறார்கள்.
எனக்குன்னு ஒரு வாரிசு கூட இல்லையே என்று அவர் கலங்குவதை கண்டு பிஜூமேனனின் உடலிலிருந்து உயிரணுவை எடுத்து ஸ்வேதாமேனனின் கருவறைக்குள் வைத்து அவளைத் தாயாக்குகிறார்கள்.அந்த பிரசவத்தை முழுவதுமாக படமாக்கி மக்களுக்கு காட்டுங்கள் என்கிறார்.
ஸ்வேதாமேனனின் நிஜ பிரசவத்தை இதற்காக படமாக்கினார்கள். அதற்காக பலத்த எதிர்ப்பும் கிளம்பியது. ஒரு பெண் தாயாவது எவ்வளவு வேதனையானது என்பதும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் காம கொடூரன்கள் இதை பார்த்தாவது திருந்த வேண்டும் என்று கூறி ஸ்வேதாமேனன் அந்த எதிர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
வசனம் – சபரிநாதன்
இசை – எம் .ஜெயச்சதிரன்
எடிட்டிங் – மணி.சி
இயக்கம் – பிளஸ்ஸி இவர் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் போன்ற பிரபல நடிகர்களை வைத்து படங்களை இயக்கியவர். பல தேசிய விருதுகளை பெற்றவர்.
நிர்வாக தயாரிப்பு – சி.மோகன்
தயாரிப்பு – அனூப் பிரதாப்.
 
