பின்னணி இசை-ல் காணப்படும் சிக்கல்கள்
ஒரு இசையமைப்பாளர் இசையமைக்கும் படத்திற்கு மற்றொரு இசையமைப்பாளர் பின்னணி இசை சேர்த்துக் கொடுப்பது இப்போது எல்லா படங்களுக்கும் ஒரு ஸ்டைலாகவே அமைந்துவிட்டது. இப்படி ஏன் நடக்கிறது? இதன் பின்னணியில் பல விஷயங்கள் இருக்கிறது. சிலர் பாடலுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை பின்னணி இசைக்கு கொடுப்பதில்லை. அதன் காரணமாகவும் டைரக்டர்கள் நன்றாக பின்னணி இசையமைக்கும் மியூசிக் டைரக்டர்களை நாடுகிறார்கள்.ஆனால் இரண்டாம் உலகம் படத்திற்கு இசையமைத்த ஹாரிஸ், தனது பின்னணி இசை பொறுப்பை தொடர முடியாத நிலைமை. இவருக்கு பதிலாக அனிருத் இசையமைக்கிறார். அதே போல ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கும் மதயானை கூட்டம் படத்திற்கு ரஹ்நந்தன்தான் இசையமைப்பாளர். ஆனால் பின்னணி இசையை ஜி.வி.பிரகாஷே செய்கிறாராம். கோடம்பாக்கத்தில் ஒரு முழு படத்திற்கு இசையமைத்ததை விட, அதிக படங்களுக்கு பின்னணி இசையை மட்டும் வழங்கியிருக்கிறார்கள் சபேஷ் முரளி சகோதரர்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு 'பின்னணி' இருப்பதுதான் விசேஷம்.