Pages

ஆறு நாட்களில் ரூ.50 கோடி வசூல் :சாதனை புரிந்தது ஆரம்பம்


அஜித்தின் ‘ஆரம்பம்’ படம், வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.9.12 கோடி வசூலை அள்ளியிருக்கிறது.
தீபாவளி தினத்தன்றும் ஞாயிற்றுக்கிழமையும் வசூல் இன்னும் மிகுதியாக இருந்தது என கூறப்படுகிறது.
அஜித் படங்களிலேயே வசூலில் சாதனை படைக்கும் படமாக ஆரம்பம் உள்ளது என்றும், வார இறுதி ஒபனிங் வசூலில் உலக அளவில் சாதனை படைக்க வாய்ப்புள்ளது என்றும் வர்த்தக நிபுணர் திரிநாத் குறிப்பிட்டுள்ளார்.ஆரம்பம் படத்தின் பட்ஜெட் ரூ.60 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட ஓப்பனிங் கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித். அவரது படம் வெளியாகும் போது தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் மொய்த்துக் கொள்ளும்.அஜித்துடன் இப்படத்தில் ஆர்யா, நயன் தாரா, ராணா, டாப்ஸி என பலரும் இணைந்திருப்பதால், அஜித் ரசிகர்கள் மட்டுமன்றி ஆர்யாவின் ரசிகர்களும் இப்படத்தை பார்க்க ஆர்வமாக இருந்தனர்.
‘பில்லா’ படத்தினைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் – அஜித் இணைந்திருப்பதால், இதுவரை இல்லாத அளவிற்கு ‘ஆரம்பம்’ படத்திற்கு டிக்கெட் புக்கிங் வேகமாக நடைபெற்றது.