Pages

ஆந்திராவில் இதுவரை இல்லாத அஜித் பட வசூல்!



நேற்றைய தினம் உலகம் முழுவதும் அஜித் நடித்த ஆரம்பம் திரைப்படம் வெளியாகியது… எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருந்த ஆரம்பம் திரைப்படம் தெலுங்கில் ‘AATA AARAMBAM’ எனும் பெயரில் டப் செய்யப்பட்டு ஆந்திராவின் பல தியேட்டர்களில் வெளியானது. முன்பதிவுகள் இல்லாதபோதும், ஹைதராபாத் உட்பட பல இடங்களில் ஆரம்பதிற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. பல தியேட்டர்களில் காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாக ஓடின.. நேற்றைய தினம் முதல் நாள் காட்சிகளில் மட்டும் ஆந்திராவில்  6 கோடி வசூல் சாதனை புரிந்தது ஆரம்பம்.  ஆந்திராவில்  விஜய்யின் துப்பாக்கி படத்திற்கு பின், முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் ஆரம்பம் தானாம். அதுபோல அஜித் படங்களில் ஆந்திராவில் 6 கோடி வரை வசூல் செய்த திரைப்படமும் இதுதானாம். தமிழ் நாட்டு கலெக்‌ஷன் இன்னும் வரவில்லை. பிற நாடுகளிலும் படm பெரிய வசூலை சந்தித்திருக்கிறதாம். அதுபற்றிய விபரங்கள் விரைவில் தருகிறோம்.