Pages

கார்த்தி மனம் திறக்கிறார் சில ருசிகர தகவல்கள்-check this out!!

கார்த்தி மனம் திறக்கிறார் சில ருசிகர தகவல்கள் :
டிகர் கார்த்தி தனது அண்ணன் சூர்யா பற்றியும், அவருடன் ஏற்பட்ட ருசிகர மோதல்கள் பற்றியும் கூறுகிறார்:
‘‘நான் ஒரு பிரபல நடிகர் வீட்டுப்பிள்ளை என்கிற கர்வம் எனக்கு என்றுமே இருந்ததில்லை. அண்ணன் சூர்யாவுக்கும் அப்படித்தான். இதற்கு காரணம், எங்க அப்பா எங்களை வளர்த்த விதம் அப்படி. எங்களை ஒரு நடுத்தர  குடும்பத்து  பிள்ளைகள் மாதிரிதான் வளர்த்தார். எப்போதும் எளிமையாக இருக்க வேண்டும். தலைக்கு மேல் கர்வம் ஏறக்கூடாது என்பதில் அப்பா கவனமாக இருந்தார்.
அப்பாவின் நேரந்தவறாமை எங்களை ஆச்சரியப்படுத்தும். இன்னொன்று, தொலைபேசியில் பேசுவதற்கு முன்பு கூட, எதை எதைமறக்காமல் பேசிவிட வேண்டும் என்று குறிப்பு வைத்துக் கொள்வார்.
நாங்கள் இரண்டு மகன்கள், ஒரு மகள். எங்கள் மூன்று பேரையும் பாகுபாடு இல்லாமல்தான் வளர்த்தார்கள். அண்ணனுடன் என்னை ஒருநாளும் ஒப்பிட்டுப் பேசியதில்லை. நான் ஏதாவது அண்ணன் பற்றி கேட்டால் கூட, ‘அவனுடன் ஒப்பிடாதே. உனக்கு எது வருமோ அதைச் செய். உனக்கு எது பிடிக்கிறதோ அதை செய்’ என்பார். என் அம்மாவும் அப்படித்தான். மூன்று பேர் மீதும் பாசமாக இருப்பார்கள். அம்மா சிறந்த குடும்ப நிர்வாகி.
இப்போதெல்லாம் என் பட நிகழ்ச்சிகளுக்கும் அண்ணன் வருகிறார். அவர் சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு நானும் போகிறேன். ஆனால் ஒரு காலத்தில் நாங்கள் எப்படியெல்லாம் இருந்தோம் என்று நினைத்தால் வேடிக்கையாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது. எனக்கும், அண்ணன் சூர்யாவுக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம். அதனால் சின்ன வயதில் அண்ணன் என்கிற பெரிய மரியாதை எல்லாம் நான் தரமாட்டேன். நண்பர்கள் போல் இருப்போம்.
சின்ன வயதில் நானும், அண்ணனும் சிரித்துப் பேசி  ஜாலியாக இருந்தது பாதி நேரம் என்றால், பேசித்திட்டி அடித்து சண்டை போட்டது மீதி நேரம். அடிப்படையில் எங்கள் இரண்டு பேருக்கும் வேறு வேறு ரசனை. எல்லா விஷயங்களிலும் வேறு வேறு கருத்துகள் இருக்கும். ஒத்துப்போகவே போகாது. அண்ணனுக்கு கமல்ஹாசன் படம் பிடிக்கும். எனக்கு ரஜினிகாந்த் படம் பிடிக்கும். இது எங்கள் தனிப்பட்ட ரசனை. ஆனாலும் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து இரண்டு நட்சத்திரங்களின் படங்களையும் பார்ப்போம். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் எங்களுக்குள் சண்டை வரும்.
புரூஸ்லீ, ஜெட்லீ படங்களை சேர்ந்து பார்ப்போம். வீடு திரும்பியதும் அடித்துக் கொள்வோம். இதுதான் புரூஸ்லீ அடி, இதுதான் ஜெட்லீ அடி என்று கட்டிப்பிடித்து சண்டை போடுவோம். நான் சின்ன வயதில் அண்ணனை விட குண்டாக இருப்பேன். ஆனால், சண்டை முடிவில் ஜெயிப்பது அண்ணன்தான். அவரிடம் அவ்வளவு வேகம் இருக்கும். நான் பதில் தாக்குதல் நடத்துவதற்குள் அண்ணன் அடித்துவிட்டு ஓடிவிடுவார்.
எனக்கு புது உடைகளை நேர்த்தியாக வைத்துக் கொள்வது பிடிக்கும். கசங்காமல் வைத்து புதிது புதிதாக போடப்பிடிக்கும். நான் இல்லாதபோது அண்ணன் என் சட்டையை எடுத்துப் போட்டு அழுக்காக்கி விடுவார். இப்படி எங்காவது என் உடையை போட்டுக் கொண்டு நிற்கும்போது, ‘பாவிப்பயல் என் சட்டையை நாசம் பண்ணிட்டானே’ என்று கோபம் வரும். நம் சட்டையை இவன் போடுகிறான். அவன் சட்டையை நாம் போட்டு பழிவாங்கலாம் என்று நினைத்தால், அதுவும் முடியாது. என் சட்டை பெரிதாக இருக்கும். இரண்டு பேரும் போட்டுக் கொள்ளலாம். அண்ணன் சட்டை சின்னதாக இருக்கும்.
நாங்கள் இருவரும் பள்ளி வயது வரை பஸ்சில்தான் போவோம். பத்தாம் வகுப்பு படித்தபோதுதான் சைக்கிள் கிடைத்தது. அப்போது என் சைக்கிளை எடுத்துக்கொண்டு அண்ணன் செய்த வம்புகளை தாங்க முடியாது. சாவியை ஒளித்து வைத்துவிட்டு அக்கம் பக்கம் போனால் கூட, வந்து பார்த்தால் சைக்கிள் இருக்காது. இரண்டு பேருக்குமே சைக்கிள் வாங்கி கொடுத்த பிறகும், என் சைக்கிள் மீதுதான் அவருக்கு கண் இருக்கும். ஏனென்றால் நான்தான் சைக்கிளை நன்றாக பராமரித்து வைத்திருப்பேன்.
‘பிளஸ்–2’ தேர்வில் நல்ல மார்க் வாங்கினால், ‘பைக்’ வாங்கி தருகிறேன் என்று எங்க மாமா கூறியிருந்தார். கஷ்டப்பட்டு படித்து நல்ல மார்க் வாங்கினேன். மாமா சொன்னபடி, எனக்கு பைக் வாங்கி கொடுத்தார். ‘பொல்லாதவன்’ தனுஷ் மாதிரி எனக்கு அந்த பைக் மீது அவ்வளவு பிரியம். காதல். அண்ணன் என் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, பைக்கை எடுத்து சென்று விடுவார். எப்படி இருக்கும் எனக்கு?     என் பைக் சாவியை எங்காவது   ஒளித்து  வைத்து விட்டு, குளித்து விட்டு வந்து பார்த்தால், வண்டி இருக்காது. ஏன்டா எனக்கு இப்படி ஒரு அண்ணனா வந்து பொறந்தேன்னு திட்டுவேன்.
இதெல்லாம் ஒரு கட்டம் வரைதான். நான் அமெரிக்கா போய் படித்தேன். திரைப்படம் சம்பந்தப்பட்ட படிப்பு. முதன்முதலாக அமெரிக்காவில் இருந்து திரும்பியபோது, எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. வீட்டில் பேசக்கூட ஆளில்லை. அண்ணன் கும்பகோணத்தில், ‘பிதாமகன்’ படப்பிடிப்பில் இருந்தார். அப்போது, ‘காக்க காக்க’ வெளியாகி இருந்தது. கும்பகோணம் போய் பார்த்தபோது, அண்ணன் அடையாளமே தெரியாதபடி, மாறியிருந்தார். நான் அமெரிக்கா போன கொஞ்ச காலத்தில், இவ்வளவு மாற்றமா? என்று ஆச்சரியப்பட்டேன்.
படப்பிடிப்பில் என்னை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினார். ஒவ்வொருவரிடமும் என்னைப் பற்றி பேசும்போதும், ‘‘என் தம்பி அமெரிக்காவில் படிக்கிறான்’’ என்று கண்களில் பெருமை மின்ன கூறினார். அந்த வம்புக்கார அண்ணனா? என்று அவரை நான் ஆச்சரியமாக பார்த்தேன்.
நான், ‘பருத்தி வீரன்’ படத்தை முடித்ததும், எனக்கு கார் வாங்கி பரிசாக கொடுத்தார். நாங்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும்போதெல்லாம் சினிமா பற்றியே பேசுவோம். அவர் நடிக்கப் போகும் படம், பாத்திரம், தோற்றம், கதை பற்றி என்னிடம் விவாதிப்பார். ஹாலிவுட் படங்களில் இது மாதிரி வந்திருக்கிறதா? என்று கேட்பார். ஹாலிவுட் படங்களில் நான் அத்துப்படி.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் உடற்பயிற்சிக்கு ஒய்.எம்.சி.ஏ. மைதானம் செல்வோம். அவருக்கு அது, ‘வாரணம் ஆயிரம்’ காலம். எனக்கு, ‘ஆயிரத்தில் ஒருவன்’ காலம். அவர் உடல் மெலிவதற்காக மைதானத்தை 25 சுற்று சுற்றுவார். அசர மாட்டார். நான், 15 சுற்றுகளில் களைத்து விடுவேன். அண்ணன் இவ்வளவு முதிர்ச்சியாக, பொறுப்பாக மாறியதை நினைத்து எனக்கு ஆச்சரியம் தாங்காது.
திருமணம் ஆன பிறகு அவருக்கு மிகவும் பொறுப்பு வந்துவிட்டது. வீட்டுக்கு மூத்த பிள்ளையாக நடந்து கொண்டார். அண்ணி வந்த பிறகு வெளியில் எங்கு போனாலும், என்னையும் அழைத்து செல்வார். நானும் அவர்களுடன் செல்வேன். அண்ணன்–அண்ணிக்கு ‘போர்’ அடித்தால், என்னை கிண்டல் செய்து சிரிப்பார்கள். உடன் அழைத்து செல்வது, நம்மை வைத்து பொழுதுபோக்கத்தானா? என்று நினைப்பேன்.
கடைக்குட்டியாக பிறந்ததால், எங்க வீட்டில் தங்கைக்கு ரொம்ப செல்லம். அவள் கேட்டதெல்லாம் கிடைக்கும். நினைத்ததெல்லாம் நடக்கும். அப்படி செல்லமாக இருந்த தங்கை திருமணத்தின்போது, பெரிய மனுஷன் மாதிரி அண்ணன் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்தார். கவனித்துக் கொண்டார். அண்ணனின் ஈடுபாடு, உழைப்பு, விடா முயற்சி, பொறுப்பு, குடும்பத்தை–குழந்தைகளை கவனிப்பதில் முதிர்ச்சி எல்லாம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. அவருடைய மாற்றங்களை பார்க்கிற போதெல்லாம் அவரா இவர்? என்ற கேள்வி எனக்குள் எழும்.
அப்படிப்பட்ட அண்ணன் என் ‘பருத்தி வீரன்’ படம் பார்த்துவிட்டு, ‘‘என்னடா இப்படி பண்ணி வச்சிருக்கே’’ என்று என்னை பாராட்டியது, மறக்கமுடியாத தருணம். பல விஷயங்களில் எனக்கு அண்ணனை பின்பற்ற ஆசை. 6 மாதங்கள் வெளியூர் படப்பிடிப்பில் இருந்துவிட்டு, தொடர்ந்து 15 நாட்கள் வீட்டில் இருந்தால் கூட, திருப்தி வருவதில்லை. குடும்பத்துக்கு ஞாயிற்றுக்கிழமையை ஒதுக்கலாம் என்றால், அன்றைக்குத்தான் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்கிறது. அப்போதெல்லாம் அண்ணனின் உழைப்பையும், விடா முயற்சியையும் நினைத்துக் கொள்கிறேன். உடனே உற்சாகம் வந்து விடுகிறது.’’
நடிகர் கார்த்தி தனது அண்ணன் சூர்யா பற்றியும், அவருடன் ஏற்பட்ட ருசிகர மோதல்கள் பற்றியும் கூறுகிறார்: