“பில்லா” என்ற மெகா ஹிட் படத்திற்கு பிறகு மீண்டும் “தல” அஜித், டைரக்டர் விஷ்ணுவர்தன், யுவன் கூட்டணியில் வெளிவந்திருகிறது “ஆரம்பம்”. இதில் “தல” அஜித்துடன் ஆர்யா, நயன்தாரா, தாப்ஸி, ராணா, கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீ சத்ய சாய் நிறுவனம் தயாரித்துள்ளது. தான் ”பாக்ஸ் ஆபீஸ் ஓபினிங் கிங்” என்பதை மீண்டும் ஒருமுறை ”ஆரம்பம்” படம் மூலமாக ”தல” அஜித் நிருபித்துள்ளார். “பஸ்ட் டே பஸ்ட் ஷோ” மட்டும் அல்ல இன்று முழுவதும் திரையிட்ட அணைத்து திரை அரங்கிலும் ஹவுஸ்புல் தான். தல ரசிகர்கள் மட்டும் அல்ல அணைத்து சினிமா ரசிகனையும் முதல் நாளே பார்க்க தூண்டியுள்ளது இப்படம். இவ் வளவு எதிர்பார்ப்பினை தல அஜித்தின் ஆரம்பம் பூர்த்தி செய்ததா என்று நமது விமர்சனத்தில் பார்க்கலாம்.
கம்ப்யூட்டர் ஹாக்கராக “ஆர்யா”. படத்தில் அஜித் கூடவே பயணிக்கும் இவர் , சில இடங்களில் நன்றாக நடிக்கவும் செய்துள்ளார். முக்கியமாக உடல் பருமனாக வரும் காலேஜ் காட்சிகளில் ஆர்யா கலக்குகிறார். ராணாவின் தங்கையாக நயன்தாரா. ஆர்யாவின் ஜோடியாக தாப்சி. இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை நிறைவாக செய்துள்ளனர்.
படத்தின் பெரிய பலமே திரைக்கதை தான். இதில் இயக்குனர் விஷ்ணுவர்தன் சிக்ஸர் அடித்துள்ளார். பிளாப் “சர்வம்”, சுமார் பாஞ்சாவிற்கு பிறகு மெகா ஹிட் கொடுத்திருகிறார் விஷ்ணு. இவருக்கு தனது இசையால் “ஆரம்பம்” படத்தை தோள்கொடுத்து தூக்கிவிட்டிருகிறார் யுவன் ஷங்கர் ராஜா. பாடல்கள் அனைத்தும் அருமை, அதிலும் “ஆரம்பமே அதிருதடா” பட்டய கிளப்புது. அதை விட ஓம் பிரகாசின் ஒளிப்பதிவு செம சூப்பர் அண்ட் ஸ்டைலிஷ். ஒரு த்ரில்ளர் படத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாத எடிட்டிங்கை செய்துள்ளார் ஸ்ரீதர் பிரசாத். ஸ்டீபன் ரிச்டர், லீ விட்டகர் மற்றும் கிச்சாவின் சண்டைகாட்சிகள் படத்திற்கு பெரிய பிளஸ்.
ஆகமொத்தத்தில் இந்த தீபாவளியை சினிமா ரசிகர்களுக்கு ”தல” தீபாவளி ஆகிய இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு பாராட்டுக்கள்.