ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்து கார்த்திக், காஜல் அகர்வால் சந்தானம் இணைந்து நடித்துள்ள படம் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’. இப்படத்தை ‘SMS’ பட புகழ் ராஜேஷ் டைரக்ட் செய்துள்ளார். இத்திரைப்படம் நாளை தீபாவளியன்று ரிலீசாகிறது. ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ பெயரை ‘காமெடி கிங்’ கவுண்டமணி நடித்து புகழ்பெற்ற ஒரு படத்தில் இருந்து எடுத்துள்ளனர். படத்தின் பெயரும் மக்கள் மத்தியில் நல்ல ரீச் ஆனது. படத்தின் தலைப்பில் ஆங்கிலம் இருந்தால் படத்துக்கு யூ சான்றிதழோ, வரிவிலக்கோ கிடைக்காது என்பது தெரிந்தும் படக்குழுவினர் படத்தின் பெயரை ‘அழகுராஜா’ என்று பதிவு செய்துவிட்டு விளம்பரங்களில் மட்டும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ என்று குறிப்பிட்டார்கள். அதுவும் ‘ஆல்இன்ஆல்’ என்பதை மிகவும் சிறிய எழுத்தில் இருக்கும் படி பார்துக்கொண்டனர். எல்லாமே நன்றாக தான் போனது. ஆனால் படம் ரிலீஸ் ஆகும் தருவாயில்
இப்போது தணிக்கை குழுவினர், வரிவிலக்கு குழுவினரும் இதற்கு பெரிய ஆப்பு வைத்துள்ளனர். படத்தின் விளம்பரத்தில்கூட ‘ஆல்இன்ஆல்’ இருக்க கூடாது என்று கண்டிப்புடன் கூறியதாக தெரிது. இதனால் தற்போது வரும் விளம்பரங்களில் ‘ஆல்இன்ஆல்’ மிஸ்சிங். தலைப்பில் ரைமிங்காக ‘ஆல்இன்ஆல்’ இல்லாமல் வெறும் ‘அழகு ராஜா’ தான் நாளை திரைக்கு வருகிறார்.