Pages

Showing posts with label MovieReviewInTamil. Show all posts
Showing posts with label MovieReviewInTamil. Show all posts

ரம்யா நம்பீசன்-ன் கல்யாண செய்தி:

ரம்யா நம்பீசன்-ன் கல்யாண செய்தி:

'மலையாள நடிகர், உன்னி முகுந்தனை, நான் ரகசிய திருமணம் செய்யவில்லை' என்று மறுத்துள்ள ரம்யா நம்பீசன், 'இப்போதைக்கு நடிப்பில் மட்டுமே என் கவனம் உள்ளது' என்கிறார்.மேலும் இவர் பாடல்கள் படுவதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.தற்போது வெளியான பாண்டிய நாடு படத்தில் உள்ள "fy fy fy kalachi fy" என்ற பாடல் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

Pandiya Nadu Movie Review In Tamil

நடிகர் : விஷால்
நடிகை :லட்சுமி மேனன்
இயக்குனர் :சுசீந்திரன்
இசை :டி.இமான்
ஓளிப்பதிவு :ராஜீவன்
மதுரையில் நடுத்தரக் குடும்பத்தில் அப்பா, அம்மா, அண்ணன்-அண்ணி, அண்ணனின் குழந்தை என ஒரே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார் விஷால். இவர் மிகவும் பயந்தாங்கொள்ளி. பதட்டம் ஏதும் வந்தால் இவருடைய வாயில் வார்த்தைகள் திக்கி திக்கி வரும். 

இவர்கள் இருக்கும் வீட்டிற்கு மேலேயே நாயகி லட்சுமிமேனன் அவருடைய அம்மாவுடன் குடியிருக்கிறார். இவர் அங்குள்ள ஸ்கூலில் டீச்சராக வேலைபார்க்கிறார். 

மொபைல் சர்வீஸ் சென்டரில் வேலை பார்க்கும் விஷால் தன் அண்ணனுடைய குழந்தையை ஸ்கூலுக்கு விடப்போகும்போது அங்கு லட்சுமிமேனனை பார்க்கிறார். பார்த்ததும் காதலில் விழுந்துவிடுகிறார். 

தன்னுடைய காதலை லட்சுமிமேனனிடம் கூறினால், அவர் அதை ஏற்பதாக இல்லை. ஒருகட்டத்தில் ரவுடிகள் லட்சுமி மேனனுக்கு டார்ச்சர் கொடுக்க, அதற்கு லட்சுமிமேனன் விஷால் உதவியைநாட, விஷால் தன்னுடைய நண்பனான விக்ராந்த் மூலம் அந்த பிரச்சினையை சரிசெய்துகொடுக்க விஷால்மீது லட்சுமிமேனன் காதல் வயப்படுகிறார். 

இந்நிலையில், அந்த ஊரில் பிரபல தாதாவாக இருக்கும் ஒருவர் இறந்துவிடுகிறார். அவருக்கு பிறகு அந்த பதவியை வகிக்க இரண்டு ரவுடிகளிடேயே போட்டா போட்டி நடக்கிறது. இதில் வில்லன் பரத் தனக்கு போட்டியாக வருபவனைக் கொன்று அந்த பதவிக்கு வருகிறார். 

மதுரையில் அந்த வில்லனுக்கு சொந்தமான கிரானைட் குவாரியில் நடக்கும் முறைகேட்டை தட்டிக்கேட்கும் விஷாலின் அண்ணனுக்கும், வில்லனுக்கும் சண்டை வருகிறது. இந்த சண்டையில் விஷாலின் அண்ணன் கொல்லப்படுகிறார். 

தன்னுடைய மகன் சாவுக்கு வில்லன்தான் காரணம் என்பது அப்பா பாரதிராஜாவுக்கு தெரிய வருகிறது. எனவே, தன் மகனைக் கொன்றவனை பழிவாங்க கூலிப்படையை நியமிக்கிறார். ஒருகட்டத்தில் விஷாலுக்கும் தன் அண்ணனைக் கொன்றவன் வில்லன்தான் என்பது தெரியவர, விக்ராந்த் உதவியுடன் வில்லனைக் கொலை செய்ய முடிவெடுக்கிறார். 

இறுதியில், யார் அந்த வில்லனை கொன்றார்கள்? வில்லனை எப்படிக் கொன்றார்கள்? விஷால்-லட்சுமி மேனன் காதல் என்னவாயிற்று என்பதை மண்மணம் மாறாமல் சொல்லியிருக்கிறார்கள். 

விஷாலுக்கு வழக்கமாக வில்லன்களை பாய்ந்து பாய்ந்து அடித்து துவைக்கும் கதாபாத்திரம் அல்ல. ரொம்பவும் பயந்த சுபாவம். ஆனால், இவர் பயந்துகொண்டே வில்லன்களை புரட்டும் விதம் அட்டகாசம். விஷாலின் அற்புதமான நடிப்பு படத்திற்கு மேலும் ஒரு பிளஸ் பாயிண்ட். 

இப்படத்தில் விஷாலுக்கு அடுத்தபடியாக அவருடைய அப்பாவாக வரும் பாரதிராஜாவும் நம் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறார். தனது மகன் கொல்லப்பட்டதும், பதட்டமடையும் பாரதிராஜா, அதற்கு தன்னால் எதுவும் செய்யமுடியவில்லையே என வருந்துவது ஒரு பக்கம், தன் மகனை கொன்றவர்களை எப்படியாவது பழிவாங்கவேண்டும் என்ற வெறி ஒரு பக்கம் என இரண்டு பக்கமும் போராடும் தந்தையாக அற்புதமாக நடித்திருக்கிறார். 

துறுதுறுப்பையெல்லாம் தொலைத்துவிட்டு பாந்தமான முகத்துடன், டீச்சராக வந்து போகிறார் லட்சுமிமேனன். கதாநாயகியாக இருக்கவேண்டும் என்ற கட்டாயத்துக்காக வந்துவிட்டு போகிறார். விஷாலுடன் இவர் பேசும் குறும்பு பேச்சு அழகு. சூரி படம் முழுக்க விஷாலுடன் வருகிறார். ஒரு சில காட்சிகள் கலகலப்பாக இருந்தாலும், வழக்கமான சூரி இந்த படத்தில் இல்லை. 

இவர்களைவிட விஷாலின் நண்பனாக வரும் விக்ராந்த் சிறிது நேரமே வந்தாலும் தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து நம் மனதில் பதிந்து விடுகிறார். இந்த படத்திற்கு பிறகு மக்கள் மனதில் நல்ல ஒரு இடம் இவருக்கு கிடைக்கும். 

எதிர்நீச்சல் படத்தில் நந்திதாவுக்கு அப்பாவாக வரும் பரத், இந்த படத்தில் வில்லனாக கலக்கியிருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவரது ஒவ்வொரு முகபாவனைகளும் ரசிக்க வைக்கிறது. தொடர்ந்து வில்லன் வேடங்களில் ஒரு ரவுண்டு வரக்கூடிய தோற்றம் இருக்கிறது. 

வழக்கமாக தென் தமிழகத்தை மையமாகக் கொண்ட படம் என்றாலே வன்முறைக் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. இந்த படத்திலும் அதுவே மேலாங்கியுள்ளது. படம் முழுக்க மதுரையில் இருக்கிற ஒரு உணர்வைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். வழக்கமான ஒரு பழி வாங்கல் கதை தான் என யாரும் சொல்லி விடாதபடி திரைக்கதையில் மெனக்கெட்டு இருக்கிறார். 

டி.இமான் இசையில் ஒத்தக்கடை மச்சான் பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் பெரிதாக மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஒளிப்பதிவும் சுமார் ரகம்தான். 

மொத்தத்தில் ‘பாண்டிய நாடு’ ஆட்சியை பிடிக்கும்.

all in all அழகுராஜா– திரைவிமர்சனம்


நடிகர் : கார்த்தி
நடிகை : காஜல் அகர்வால்
இயக்குனர் : எம்.ராஜேஷ்
இசை : பாலசுப்பிரமணியம்
ஓளிப்பதிவு : எஸ்.தமன்
யாருமே பார்க்காத படு லோக்கலான சேனல் ஒன்றை நடத்தி வருகிறார் கார்த்தி. அவருடைய நண்பனாக வருகிறார் சந்தானம். இருவரும் இந்த சேனலை மக்கள் மத்தியில் எப்படியாவது பிரபலப்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான வேளைகளில் களமிறங்குகின்றனர்.
இந்த வேளையில் மேடையில் பாட்டு பாடி டார்ச்சர் பண்ணும் காஜல் அகர்வாலை பார்த்ததும் அவர்மீது காதல் கொள்கிறார் கார்த்தி. ஆனால், காஜலோ கார்த்தியை வெறுத்து ஒதுக்குகிறார். கார்த்தியின் அப்பா பிரபுவும் காஜல் இந்த காதலுக்கு ஓகே சொன்னாலும் தான் இவர்களுடைய காதலை ஒப்புக்கொள்ளப் போவதில்லை என விடாபிடியாக இருக்கிறார். அதற்கு பிரபு ஒரு காரணமும் கூறுகிறார்.
அந்த காரணம் என்ன? கார்த்தியும், காஜல் அகர்வாலும் இறுதியில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதை காமெடியுடன் கலகலப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
அழகுராஜாவாக வருகிறார் கார்த்தி. பிளாஸ்பேக் காட்சியில் பிரபுவின் 80-கள் கெட்டப்பிலும் நடித்துள்ளார். பிரபுவின் கெட்டப்பில் நடிப்பதற்கு ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். அந்த சிரமம் நடிப்பில் தெரிகிறது. மற்றபடி அழகுராஜாவா ஜொலித்திருக்கிறார்.
சந்தானம் இந்த படத்தின் இன்னொரு ஹீரோ என்றுகூட சொல்லலாம். கார்த்திக்கு இணையாக படம் முழுவதும் வலம் வருகிறார். சந்தானம்-ராஜேஷ் கூட்டணியில் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகும். அதேபோல் இந்த படத்திலும் சந்தானம் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகக்கூடும். கரீனா சோப்ரா என்ற பெண் வேடத்திலும் சந்தானம் நடித்திருக்கிறார். ஆனால், பார்க்கத்தான் சகிக்கமுடியவில்லை.
சித்ரா தேவிப்ரியா என்ற கதாபாத்திரத்தில் மேடை பாடகியாக வருகிறார் காஜல் அகர்வால். மற்ற படங்களைவிட இந்த படத்தில் அழகாக இருக்கிறார். காமெடி கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்திருந்தாலும் காமெடி பண்ணுவதில் முத்திரை பதித்திருக்கிறார்.
கார்த்தியின் அப்பாவாக பிரபு, அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், இன்னொரு நாயகியாக வரும் ராதிகா ஆப்தே ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக வரும் கோட்டா சீனிவாசராவ், பெண் வேடம் போட்டிருக்கும் சந்தானத்திற்காக அலையோ அலையென அலைவது சிரிக்க வைக்கிறது.
இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் ‘உன்னைப் பார்த்த நேரம்’ பாடல் 80-களில் கேட்கும் மெலோடியை நினைவுப்படுத்துகிறது. பின்னணி இசையும் பரவாயில்லை.
தொடர்ந்து காமெடி படங்களையே எடுத்துவந்த ராஜேஷ்தான் இந்த படத்தையும் எடுத்திருக்கிறார். தனது முந்தைய படங்களைவிட இந்த படத்தில் கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். தொடர்ச்சியாக காட்சிகளை ரசிக்கமுடியாமல் ஆங்காங்கே கொஞ்சம் கடுப்பேத்தியிருக்கிறார். மற்றபடி காமெடிக்கு படத்தில் பஞ்சமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
மொத்தத்தில் ‘அழகுராஜா’ ஆல் இன் ஆல் காமெடி ராஜா!

AARAMBAM REVIEW IN TAMIL


ஆரம்பம்- திரைவிமர்சனம்:

Name: AARAMBAM
starring:Ajith.Nayanthara,Arya,Tapsee
Directed by: Vishnu varthan
production:A. Rahuram
Cinematography: Om Prakash
Studios: sri sathya sai movies 

முழுக்க முழுக்க மும்பையில் நடக்கும் கதை. மும்பையில் முக்கியமான மூன்று இடங்களில் பயங்கர குண்டுவெடிப்பு ஒன்று நடக்கிறது. இந்த குண்டுவெடிப்பை நடத்தியவர் அஜீத்.
இதேவேளையில் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினியரிங் படித்து முடித்த ஆர்யாவும், டிவி ரிப்போர்ட்டராக வேலை செய்யும் டாப்சியும் ஒருவருக்கொருவர் காதலிக்கின்றனர். தன் காதலியை பிரிய முடியாமல் வெளிநாடுகளில் இருந்து வந்த வேலையெல்லாம் விட்டுவிட்டு சென்னையிலேயே வேலை செய்து வருகிறார் ஆர்யா.
மும்பையில் நாசகார வேலைகளுக்கு ஆர்யாவின் சாப்ட்வேர் மூளையை பயன்படுத்திக் கொள்ள அவரைத் திட்டம்போட்டு மும்பைக்கு வரவழைக்கிறார் அஜீத். அங்கு வரும் ஆர்யாவுக்கு அஜீத் ஒரு தீவிரவாதி என்பது தெரியவருகிறது. இதனால் அஜீத்தின் நாசகார வேலைகளுக்கு துணைபோக மறுக்கிறார்.
ஆனால் அஜீத், ஆர்யாவின் காதலியான தாப்சியை கடத்தி வைத்துக் கொண்டு, அவளை கொலை செய்துவிடுவதாக மிரட்டி அந்த வேலைகளை செய்யவைக்கிறார். இவர்களிடமிருந்து எப்படியாவது தப்பித்துப் போகவேண்டும் என்று பலமுறை முயற்சிகள் எடுத்தும் தோற்றுப் போகிறார்.
ஒருகட்டத்தில் அவர்களிடம் இருந்து சாமர்த்தியமாக தப்பிக்கும் ஆர்யா அஜீத்தை போலீசிடம் காட்டிக் கொடுக்கிறார். காவல்துறையிடம் சிக்கிய அஜீத் என்ன ஆனார்? அவர் தீவிரவாதியாக உருவாக என்ன காரணம்? என்பதை ஆர்யாவுக்கு நயன்தாரா பிளாஸ்பேக்குடன் விவரிக்கிறார்.
படத்தில் ஸ்டைலிஷாக அஜீத் வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான் என்று சொல்லவேண்டும். மங்காத்தா கெட்டப்பில் வந்தாலும், மங்காத்தாவில் அஜீத்திடம் பார்த்த ஸ்டைல் இந்த படத்தில் இல்லை. இவரைவிட, இவர் நண்பராக வரும் ராணா அனைவரையும் ஈர்க்கிறார். முற்பாதியில் சீரியசாக வரும் அஜீத், பிற்பாதியில் களைகட்டுகிறார். பிற்பாதியில் இவர் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது.
ராணாவின் தங்கச்சியாக நயன்தாரா வருகிறார். படம் முழுக்க அஜீத் கூடவே வருகிறார். படத்தில் இவருக்கு செமத்தியான கதாபாத்திரம்தான். சாப்ட்வேர் இன்ஜினியராக வருகிறார் ஆர்யா. ‘ராஜாராணி’ படத்தில் நடித்த ஆர்யாவுக்கு எதிர்மறையான கதாபாத்திரம். அதை கச்சிதமாக செய்திருக்கிறார். இவருடைய காதலியாக வரும் தாப்சி இந்த படத்தில் கொஞ்சம் அழகாகவே இருக்கிறார். இவர் செய்தி வாசிக்கும் காட்சியைத்தான் ரசிக்க முடியவில்லை.
காவல்துறை உயர் அதிகாரிகளாக வரும் அதுல் குல்கர்னியும், கிஷோரும் அவ்வப்போது ஒருசில சீன்களில் வந்து தலைகாட்டிக் கொண்டே இருக்கிறார்கள். உள்துறை மந்திரியாக வரும் மகேஷ் மஞ்ச்ரேக்கரின் முகபாவனையும், நடிப்பும் மிரட்ட வைக்கிறது. அஜீத்துக்கு அடுத்தப்படியாக இவருடைய நடிப்பு ரொம்பவே ரசிக்க வைக்கிறது.
சுபாவின் திரைக்கதையில் விறுவிறுப்பு இருக்கிறது. அரசியல்வாதிகள் செய்யும் ஊழலை பின்னணியாக வைத்து படத்தை எடுத்ததற்காக இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு சலாம் போடலாம். பில்லா என்ற பெரிய படத்திற்கு பிறகு அஜீத்-விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவான படம் என்பதால் படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில் பரபரப்பான கதைக்களத்துடன் படமாக்கியிருக்கிறார் விஷ்ணுவர்தன். அஜீத் ரசிகர்களுக்கு உண்மையிலேயே கொண்டாட்டமான படம்தான் இது.
யுவன் இசையில் ‘அடடா ஆரம்பம்’ பாடல் ஆடாதவர்களையும் ஆட்டம் போட வைக்கும். மற்ற பாடல்கள் மனதை ஈர்க்கவில்லை. பின்னணி இசையில் யுவன் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் மும்பை மாநகரத்தை இன்னொரு கோணத்தில் படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளை படமாக்கிய விதம் அருமை.


Krish 3 Movie Review In Tamil

நடிகர் : ஹிருத்திக் ரோஷன்
நடிகை : கங்கனா ரனாவத், பிரியங்கா சோப்ரா
இயக்குனர் : ராகேஷ் ரோஷன்
இசை : சலீம்-சுலைமான்
ஓளிப்பதிவு : திரு
மும்பையில் வாழும் ஹிருத்திக் ரோஷன் மனநலம் குன்றியவராக இருக்கிறார். பெரியவனாக வளர்ந்தபின்னும் மனதளவில் அவர் குழந்தையாகவே இருக்கிறார். இந்நிலையில், விண்வெளியில் இருந்து பூமிக்கு வரும் வேற்றுக்கிரக வாசிகள் இவருக்கு ஒரு அதீத சக்தியை கொடுத்துவிட்டு செல்கின்றனர். இதனால், இவருடைய மூளை அதிக சக்தி பெற்று அறிவார்ந்தவராக மாறுகிறார்.
இதையடுத்து, அவருக்கு திருமணமாகிறது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. இந்நிலையில் ஆராய்ச்சிக்காக ஹிருத்திக் ரோஷனை அவருடைய தந்தை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். மும்பையில் அவரது குழந்தை ஹிருத்திக் ரோஷனாகவே வளர்கிறது.
அதிக சக்தி கொண்ட இக்குழந்தை க்ரிஷ் ஆக உருவெடுக்கிறான். இந்நிலையில், சிங்கப்பூர் சென்ற அப்பா ஹிருத்திக் ரோஷன் டி.என்.ஏ.விலிருந்து ஒரு குழந்தையை ஆராய்ச்சிக்காக அவருடைய அப்பா உருவாக்குகிறார். இது முழுமையாக வெற்றியடையாமல் கை, கால் செயலிழந்து, மூளை மட்டும் அதீத வளர்ச்சியுடன் வளர்கிறது. இவர்தான் விவேக் ஓபராய்.
இந்நிலையில், தனது அதிக சக்தி படைத்த மூளையினால் விவேக் ஓபராய், செயலிழந்த தன்னுடைய கை, கால்களை செம்மைப்படுத்த பல ஆராய்ச்சிகளை செய்கிறார். இதனால், மிருகமும், மனிதனும் கலந்த மனிதர்கள் நான்கு பேரை உருவாக்குகிறார். அதில் ஒருவர்தான் கங்கனா ரனாவத்.
தன்னுடைய ஆராய்ச்சியில் உருவாக்கிய மனிதர்கள் மூலம் விஷக்கிருமிகளை நாடு முழுவதும் பரப்பி, அதற்கு மாற்று மருந்து தயாரித்து அதன்மூலம் பணத்தை சம்பாதிக்க முடிவு பண்ணுகிறார் விவேக் ஓபராய். இதனால் மக்கள் பல பேர் உயிரிழக்க நேரிடுகிறது. இதற்கு காரணம் விவேக் ஓபராய்தான் என்பதை கண்டறியும் கிரிஷ், விவேக் ஓபராயை அழித்து மக்களைக் காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.
ஹிருத்திக் ரோஷன் முந்தைய படங்களில் நடித்ததைவிட இந்த படத்தில் ரொம்பவும் ஆக்ரோஷமாக நடித்துள்ளார். இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். மனைவியிடம் அன்பு காட்டும் சிறந்த கணவனாகவும், மகன்மீது பாசம் காட்டும் பண்புள்ள தந்தையாகவும், மக்கள் மீது பரிவு காட்டும் க்ரிஷாகவும் ஜொலித்திருக்கிறார். இவருடைய உடலமைப்பு ஹாலிவுட்டுக்கு இணையான நாயகன் என்பதை வெளிக்காட்டுகிறது.
கங்கனா ரனாவத், பிரியங்கா சோப்ரா, விவேக் ஓபராய் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கின்றனர். குறிப்பாக விவேக் ஓபராய், கங்கனா ரனாவத் ஆகியோரின் திறமையான நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.
இயக்குனர் ராகேஷ் ரோஷன் திறமையான கதையமைப்பில் உருவான இப்படம் ஆங்கிலப் படத்துக்கு விட்டிருக்கும் சவால். படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அமைந்த விதம் அருமை. ஹாலிவுட் தரத்துக்கு இணையாக படத்தை எடுத்திருக்கிறார். திரைக்கதையிலும் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார்.


AARAMBAM Movie Review In Tamil

“பில்லா” என்ற மெகா ஹிட் படத்திற்கு பிறகு மீண்டும் “தல” அஜித், டைரக்டர் விஷ்ணுவர்தன், யுவன் கூட்டணியில் வெளிவந்திருகிறது “ஆரம்பம்”. இதில் “தல” அஜித்துடன் ஆர்யா, நயன்தாரா, தாப்ஸி,  ராணா, கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை  ஸ்ரீ சத்ய சாய் நிறுவனம் தயாரித்துள்ளது. தான்  ”பாக்ஸ் ஆபீஸ் ஓபினிங் கிங்” என்பதை மீண்டும் ஒருமுறை   ”ஆரம்பம்” படம் மூலமாக ”தல” அஜித்  நிருபித்துள்ளார். “பஸ்ட் டே பஸ்ட் ஷோ” மட்டும் அல்ல இன்று முழுவதும் திரையிட்ட அணைத்து திரை அரங்கிலும் ஹவுஸ்புல் தான். தல ரசிகர்கள் மட்டும் அல்ல அணைத்து சினிமா ரசிகனையும் முதல் நாளே பார்க்க தூண்டியுள்ளது இப்படம். இவ் வளவு எதிர்பார்ப்பினை தல அஜித்தின் ஆரம்பம் பூர்த்தி செய்ததா என்று நமது விமர்சனத்தில் பார்க்கலாம்.
அரசியல் மற்றும் அதிகார வர்கத்தினர் தங்களது ஊழலையும், தேச துரோகத்தையும் மறைக்க AK-யின் (அஜித்) உயிர் நண்பனையும், குடும்பத்தையும் காவு கொடுக்க. எதிரிகளையும் அவர்களது சதிகளையும் வேரோடு சாய்க்க போராடும் AK என்ற அசோக்கின் போராட்டமே  இந்த “ஆரம்பம்”.   2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை இக்கதையில் இணைத்து திரைகதை அமைத்திருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தனும் கதாசிரியர்கள் சுபாவும். படம் முழுவதும்  விறுவிறுப்பாக இருக்கிறது. முதல் பாதியில் AK-ஆகவும் இரண்டாம் பாதியில் அசோக் ஆகவும் வருகிறார் நம்ம அஜித். பில்லா 2 சரிவை  இப்படத்தின் மூலமாக சரி செய்து இருக்கிறார் தல. படத்தில் மனுஷன் படு ஸ்டைலிஷ். சண்டைகாட்சிகளில் அதிக ரிஸ்கும் எடுத்துள்ளார் அஜித். பில்லா வசூலை மங்காத்தா முறியடித்தது, மங்காத்தா வசூலை கண்டிப்பாக இப்படம் முறியடிக்கும் என்பதில் ஐயமில்லை.
கம்ப்யூட்டர் ஹாக்கராக “ஆர்யா”. படத்தில் அஜித் கூடவே பயணிக்கும் இவர் , சில இடங்களில் நன்றாக  நடிக்கவும் செய்துள்ளார். முக்கியமாக உடல் பருமனாக வரும் காலேஜ் காட்சிகளில் ஆர்யா கலக்குகிறார். ராணாவின் தங்கையாக நயன்தாரா. ஆர்யாவின் ஜோடியாக தாப்சி. இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை நிறைவாக செய்துள்ளனர்.
படத்தின் பெரிய பலமே திரைக்கதை தான். இதில் இயக்குனர் விஷ்ணுவர்தன் சிக்ஸர் அடித்துள்ளார். பிளாப் “சர்வம்”, சுமார் பாஞ்சாவிற்கு பிறகு மெகா ஹிட் கொடுத்திருகிறார் விஷ்ணு. இவருக்கு தனது இசையால் “ஆரம்பம்” படத்தை  தோள்கொடுத்து தூக்கிவிட்டிருகிறார் யுவன் ஷங்கர் ராஜா. பாடல்கள் அனைத்தும் அருமை, அதிலும் “ஆரம்பமே அதிருதடா” பட்டய கிளப்புது. அதை விட ஓம் பிரகாசின் ஒளிப்பதிவு செம சூப்பர் அண்ட் ஸ்டைலிஷ். ஒரு த்ரில்ளர் படத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாத எடிட்டிங்கை செய்துள்ளார்  ஸ்ரீதர் பிரசாத். ஸ்டீபன் ரிச்டர், லீ விட்டகர் மற்றும் கிச்சாவின் சண்டைகாட்சிகள் படத்திற்கு பெரிய பிளஸ்.

ஆகமொத்தத்தில் இந்த தீபாவளியை சினிமா ரசிகர்களுக்கு  ”தல” தீபாவளி ஆகிய இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு  பாராட்டுக்கள்.

ஆரம்பம் “சரவெடி”        - Rating – 4/5